திருச்சி அருகே மருந்து கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

திருச்சி அருகே மருந்து கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.70 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
திருச்சி அருகே மருந்து கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
Published on

துறையூர்:

 திருச்சி மாவட்டம்  துறையூர் முசிறி பிரிவு ரோட்டில் மருந்து கடை உள்ளது. இங்கு ஊழியராக சுரேஷ் என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றார்.  இன்று காலை கடைக்கு சென்று பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த  ரூ.70 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. 

இதேப்போல் துறையூர் மலையப்பன் நகரை சேர்ந்தவர் இசக்கி பாண்டியன். மர்மநபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்கநகை மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். 

இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com