அமேசான் காடுகளில் தீ: ஜி7 நாடுகளின் உதவி தேவையில்லை -பிரேசில் நிராகரிப்பு

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் ரூ.160 கோடி வழங்கப்படும் என ஜி7 நாடுகள் அறிவித்த நிலையில், பிரேசில் நாடு இதனை நிராகரித்துள்ளது.
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ
Published on

உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசானில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த காட்டுத்தீயால் உலக நாடுகள் மிகப்பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

அமேசான் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில் இருந்தாலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா உள்ளிட்ட வேறு 8 நாடுகளிலும் இந்த காடுகள் பரவி கிடக்கின்றன. இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுமாறு உலக நாடுகளுக்கு கொலம்பியா அரசு நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ ஜி-7 அமைப்பின் உறுப்பு நாடுகள் முன்வந்துள்ளன. இது குறித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறுகையில், ‘அமேசான் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கூடிய விரைவில் உதவுவதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.

அந்த நாடுகளுடன் எங்கள் குழு தொடர்பு கொண்டு வருகிறது. இதன் மூலம் தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவி வழங்குவது தொடர்பான உறுதியான முடிவுகள் எடுக்க முடியும்’ என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை பிரேசில் நாடு நிராகரித்துள்ளது. மேலும் அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஜி7 நாடுகளின் உதவி தேவையில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com