பஸ் பயணிகளை துப்பாக்கிமுனையில் சிறைபிடித்த மர்ம நபர்: சுட்டுவீழ்த்திய அதிரடிப்படையினர்

பிரேசிலில் நாட்டில் பஸ் பயணிகளை துப்பாக்கி முனையில் சிறைபிடித்த மர்ம நபரை அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
பயணிகளை சிறைபிடித்த மர்ம நபர் சுட்டுவீழ்த்திய வீரர்
பயணிகளை சிறைபிடித்த மர்ம நபர் சுட்டுவீழ்த்திய வீரர்
Published on

பிரேசிலியா:

பிரேசில் நாட்டின் நிட்டரியோ நகரில் இருந்து ரியோ டி ஜெனிரோவுக்கு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் மொத்தம் 16 பேர் பயணித்தனர்.

பஸ் ரியோ டி ஜெனிரோவில் உள்ள பாலம் ஒன்றில் வந்து கொண்டிருந்தபோது, அந்த பஸ்சில் பயணித்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு பயணிகளை சுட்டு விடுவேன் என மிரட்டினார். இதனால் பதறிபோன ஒட்டுநர் பஸ்சை பாலத்தின் நடுவே நிறுத்தினார். இதையடுத்து பயணிகள் அனைவரையும் மர்ம நபர் பிணைக்கைதிகளாக சிறைபிடித்தான்.

இதுகுறித்து தகவல் அறிந்த பிரேசில் போலீசார், ராணுவம் மற்றும் அதிரடிப்படையினர் பஸ் நிறுத்தப்பட்டிருந்த பாலத்துக்கு விரைந்தனர். மேலும், பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் செல்ல தடை விதித்தனர்.

இதையடுத்து, ராணுவத்தின் அதிரடிப்படை பிரிவைச் சேர்ந்த மறைந்திருந்து துப்பாக்கிச்சுடும் வீரர் பஸ் பயணிகளை சிறைபிடித்து வைத்திருந்த மர்ம நபரை கூறி வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். அதிரடிப்படை வீரர் சுட்டதில் அந்த மர்ம நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து பஸ்சில் பிணைக்கைதிகளாக இருந்த 18 பயணிகளை பத்திரமாக மீட்டனர். மேலும், பஸ் பயணிகளை துப்பாக்கிமுனையில் சிறைபிடித்து ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com