கோவையில் மூளை காய்ச்சல், மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் பலி

கோவையில் மூளை காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் மூளை காய்ச்சல், மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் பலி
Published on

கோவை:

கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் ரம்யா (21). என்ஜினீயரிங்பட்ட தாரியான இவர் கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. இதையடுத்து கடந்த 15-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்.அங்கு அவருக்கு நடத்திய சோதனையில் மூளை காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் உமேஷ் (வயது 40). இவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஜடையம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. நேற்று அறையில் இருந்த உமேசின் உடல் நிலை திடீரென மோசமானது. இதனையடுத்து அவருடன் தங்கி இருந்தவர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு உமேசுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உமேஷ் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com