

ஒவ்வொரு வருடமும் பிரம்மா குமாரிகள் இயக்கம் மகா சிவராத்திரியை சிவஜெயந்தி விழாவாக வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது. அதே போல் இந்த வருடம் சிவராத்திரி விழா திருக்கயிலாயம் - மானசரோவர் தத்ரூப தரிசனத்துடன் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நாளை தொடங் 5-ம் தேதி செவ்வாய்க் கிழமை வரை தினமும காலை 8 மணிமுதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு ஆன்மீகம், நலலொழுக்கக் கல்வி மற்றும் தெய்வீக பண்புகளை கடைப்பிடிக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். இந்த ஆன்மிக சேவையை நமது சமுதாயத்தின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு விதையாக அமைகின்றது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்கள்
* திருக்கயிலாயம் - மானசரோவர் தத்ரூப தரிசனத்தின் மூலம், அனைவரும் மகாசிவராத்திரி அன்று இந்த உயர்ந்த தலத்திற்கு யாத்திரை செய்த தெய்வீக அனுபவத்தை அளித்தல்.
* சுயத்தின் மற்றும் முக்தி தாமத்தின் உண்மையான அமைதியை தியானத்தின் மூலம் அனுபவம் செய்வித்தல்.
* இராஜயோக தியானம் மற்றும் அதனை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் முறை பற்றி படவிளக்கம் அளித்தல்.
* வாழ்க்கையில் அன்றாட பிரச்சனைகளின் தீர்வுக்கான வழிகாட்டி - ஆன்மிகமே என்பதற்கான ஆன்மிக சொற்பொழிவு.
* நேர்மறையான எண்ணங்களை உருவாக்குதல், மனோபலத்தை ஏற்படுத்தி ஒருமுகப்படுத்தும் தன்மையை அதிகரித்தல் தியானத்தின் மூலம் ஞாபக சக்தியை அதிகரித்தல் போன்ற நல்லொழுக்கக் கல்வியை இளைய சமுதாயமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துதல்.
* உண்மையான அமைதியையும், தெய்வீக அனுபவத்தையும் பெற தாய்மார்களுக்கு திருவிளக்கு தியானம் செய்வித்தல்.
* மகா சிவராத்திரியை கொண்டாடும் விதமான கலைநிகழ்ச்சிகள்.
இதுபோன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த சிவராத்திரி விழாவில் இடம்பெறுகின்றன.