ஆசிரியையிடம் உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுத்த காதலன் கைது

ஆரணி அருகே ஆசிரியையிடம் உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுத்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஆரணி:

ஆரணி அடுத்த கிராமபகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.

இவரும், அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 28) என்பவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அப்போது பிரபாகரன், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அவர் கர்ப்பமானார்.

இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி வழக்குப்பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்து விசாணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com