பழனியில் சிறுவனிடம் பாலியல் தொல்லை: ரெயில்வே ஊழியர் கைது

பழனியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரெயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பழனியில் சிறுவனிடம் பாலியல் தொல்லை: ரெயில்வே ஊழியர் கைது
Published on

பழனி:

பழனி பழைய ரெயில்வே காலனியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது55). பழைய ஆயக்குடி அருகே அண்ணாநகர் ரெயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவனை தனது அறைக்கு அழைத்துள்ளார்.

சிறுவனை அறையில் வைத்து ஓரினசேர்க்கைக்கு வற்புறுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன் சத்தம் போட்டான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டனர்.

சிறுவனை பரமேஸ்வரனிடம் இருந்து மீட்டனர். பின்பு பழனி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் பரமேஸ்வரன் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைதொடர்ந்து பரமேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com