ஓரின சேர்க்கையால் பாதிக்கப்பட்ட சிறுவன் பலி- வட மாநில வாலிபர் கைது

கீரனூரில் ஓரின சேர்க்கையால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தான். வட மாநில வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கீரனூர்:

புதுக்கோட்டை கீரனூர் பகுதியில் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில்  குஜராத் மாநிலத்தை சேர்ந்த தனுஷ் பட்டேல் (வயது36) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் குவாரி அருகே சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனை தனுஷ் பட்டேல் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச்சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இதையறிந்த பொதுமக்கள் தனுஷ்பட்டேலை கையும் களவுமாக பிடித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் தனுஷ் பட்டேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன்  புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். 

இந்தநிலையில் தனுஷ் பட்டேலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரியிடம் பரிந்துரைத்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில்  தனுஷ்பட்டேலை போலீசார் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com