வீரபாண்டி அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி சிறுவன் பலி

வீரபாண்டி அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் பலி
சிறுவன் பலி
Published on

உப்புக்கோட்டை:

வீரபாண்டி அருகே உள்ள முத்துதேவன்பட்டி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் மீனா. இவரது மகன் பிரவீன்குமார் (வயது 13). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். பிரவீன்குமார் நேற்று அங்குள்ள முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்றான். ஆற்றில் அவன் குளித்து கொண்டிருந்தபோது, அவனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீரில் மூழ்கிய பிரவீன்குமார் பரிதாபமாக இறந்துபோனான்.

இதுகுறித்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com