ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி எம்.பி.க்கள் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு

கடந்த வாரம் முழுவதும் அமளியால் முடங்கிய பாராளுமன்றம் இன்று மீண்டும் கூடிய நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. #BudgetSession
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி எம்.பி.க்கள் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி:

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் 5-ம் தேதி தொடங்கியது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி மோசடி, காவிரி மேலாண்மை வாரியம் என பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக் கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் பெரும்பாலான நேரங்களில் முடங்கியே இருந்தது.

மேற்கண்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகள் அவையை நடத்த ஒத்துழைக்க மறுத்தன. இந்நிலையில், விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் பாராளுமன்றம் கூடியது. மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியதும், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், மக்களவையை மதியம் 12 மணி வரையும் மாநிலங்களவை 2 மணி வரையும் ஒத்தி வைத்து சபாநாயகர்கள் உத்தரவிட்டனர். #BudgetSession #LokSabha #RajyaSabha

X

Maalai Malar
www.maalaimalar.com