பிரெஞ்சு ஓபன்: கலப்பு இரட்டையர் காலிறுதியில் நேருக்கு நேர் மோதும் போபண்ணா-சானியா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் காலிறுதி ஆட்டத்தில் ரோகன் போபண்ணாவும், சானியா மிர்சாவும் மோத உள்ளனர்.
பிரெஞ்சு ஓபன்: கலப்பு இரட்டையர் காலிறுதியில் நேருக்கு நேர் மோதும் போபண்ணா-சானியா
Published on

பாரிஸ்:

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, சானியா மிர்சா ஆகியோர் தங்கள் பிரிவுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா-இவான் டோடிக் ஜோடி, நியூசிலாந்தின ஆர்டம் சிதக்-உக்ரைனின் எலினா சுவிடோலினா ஜோடியை 6-2, 6-4 என வெற்றி பெற்று காலிறுதியை உறுதி செய்தது.

மற்றொரு ஆட்டத்தில் ரோகன் போபண்ணா- கேப்ரியேலா டப்டோவ்ஸ்கி ஜோடி 6-3. 6-2 என்ற செட்கணக்கல் பிரான்சின் சோல் பாக்வட்-பெனாயிட் பெய்ரே ஜோடியை வீழ்த்தியது. வெற்றி பெற்ற இந்த இரண்டு ஜோடிகளும், இன்று நடைபெற உள்ள காலிறுதி ஆட்டத்தில் மோத உள்ளன.

ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, உருகுவேயின் பாப்லோ கியூவாசுடன் இணைந்து விளையாடினார். இந்த ஜோடி, புரூனே சோர்ஸ்-ஜேமி முர்ரே ஜோடியிடம் தோல்வியடைந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com