

பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பயர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி, தச்சு தொழிலாளி. இவரது மனைவி செல்வி (வயது 39). இவருக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போனது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால் வேதனை அடைந்த செல்வி சம்பவத்தன்று உடலில் மண்ணென்ணை ஊற்றி தீக்குளித்தார். இதனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்த கணவர் ராஜாமணி மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் இருவரும் தீக்காயம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
செல்வி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.