

பாப்பிரெட்டிப்பட்டி:
தருமபுரி மாவட்டம், பொம்மிடியை அடுத்துள்ள பி.துறிஞ்சிப்பட்டி 4 ரோட்டில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக பெரியசாமி, ராஜேந்திரன், மேற்பார்வையாளராக சுப்பிரமணி ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.
வழக்கம் போல் நேற்றிரவு மதுக்கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு ஊழியர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்றுகாலை மதுக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பொம்மிடி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது மர்ம நபர்கள் நள்ளிரவு மதுக்கடையை பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கடையில் இருந்து 4 விலை உயர்ந்த மதுப்பாட்டில்களும், 6 ஆயிரத்து 500 பணமும் கொள்ளை போனது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து டாஸ்மாக்கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.