பட்டுக்கோட்டையில் பா.ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பட்டுக்கோட்டை நகரில் பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை நகரம் மேலத்தெரு கோரிக் கொல்லை பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார் (வயது 37). இவர் தஞ்சை தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட பிரச்சாரபிரிவு தலைவராக பதவி வகித்துள்ளார். நேற்று இரவு 8 மணி அளவில் அவருடைய வீட்டில் இருந்த சமயத்தில் அடையாளம் தெரியாத, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி சென்றனர். 

வீசிய வேகத்தில் அருகில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பட்டு தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். அகில இந்தியா முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்த போராட்டம் நடந்து வரும் நிலையில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ராஜ்குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com