பேஸ்புக்கில் மிரட்டல் - ஆம்பூர் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

பேஸ்புக்கில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து ஆம்பூர் நகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஆம்பூர் ரெயில் நிலையத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்திய காட்சி.
ஆம்பூர் ரெயில் நிலையத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்திய காட்சி.
Published on

காஷ்மீர் பிரச்சினை மற்றும் சுதந்திர தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

மேலும் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்படுகிறது. நேற்று மாலை பேஸ்புக்கில் ஆம்பூருக்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுத்து போட்டோ ஒன்று வெளியானது.

அதில் குண்டு ஒன்னு வச்சிருக்கேன். ஆம்பூருக்கு வெடிகுண்டு ஒன்னு வச்சு இருக்கேன் என கூறப்பட்டிருந்தது. இது வலைதளங்களில் வேகமாக பரவியது.

மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் ஆம்பூர் நகரம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com