நைஜீரியாவில் 16 பேரை சுட்டுக்கொன்ற போகோ ஹராம் பயங்கரவாதிகள்

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட 16 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜீரியாவில் 16 பேரை சுட்டுக்கொன்ற போகோ ஹராம் பயங்கரவாதிகள்
Published on

அபுஜா:

நைஜீரியாவில் தடை செய்யப்பட்ட போகோ ஹராம் பயங்கரவாதிகள், அரசுப் படைகள் மீதும், பொதுமக்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் பதற்றம் நிறைந்த வடகிழக்கு மாநிலமான போர்னோவில் நேற்று போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 

மைதுகுரியின் புறநகர்ப்பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களில் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், உள்ளூர் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த 5 பேர், பொதுமக்களில் 11 பேர் என 16 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

பயங்கரவாதிகள் கருப்பு அங்கி அணிந்து மோட்டார் சைக்கிள்களில் வந்து தாக்குதல் நடத்தியதாகவும், பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளில் இருந்து தப்பி ஓடி புதர்களில் மறைந்துகொண்டதாகவும் பொதுஜன கூட்டு அதிரடிப்படையின் செய்தித் தொடர்பாளர் கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com