

அபுஜா :
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பொதுமக்கள் மீது அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள ஹன்சாய் நகரின் கிராமம் ஒன்றுக்குள் திடீரென நுழைந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள் அங்கிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், அந்த கிரமத்தில் இருந்த வீடுகளுக்கு தீ வைத்ததோடு மட்டுமல்லாமல் 12 பேரை கடத்திச்சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாதுகாப்புப்படையினர் கடத்தி செல்லப்பட்டர்களை தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.