கோடைகாலம் எதிரொலி குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த போடி நகர் மக்களுக்கு உத்தரவு

கோடை காலத்தில் மழை குறைவாக இருப்பதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த போடி நகர் மக்களுக்கு நகராட்சி ஆணையாளர் சவுந்திரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
கோடைகாலம் எதிரொலி குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த போடி நகர் மக்களுக்கு உத்தரவு
Published on

போடி:

போடி நகராட்சி ஆணையாளர் சவுந்திரராஜன் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

தேனி மாவட்டம் போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இங்கு உள்ள மக்களுக்கு குடிநீர் சீராக வழங்கப்படுகிறது. தற்போது கோடை காலத்தில் மழை குறைவாக இருப்பதால் குடிநீர் நிலையத்திற்கு குடிநீர் வரத்து குறைந்து கொண்டே வருகிறது. போடி அருகில் கேரளா மாநிலம் உள்ளது. அங்கு கோடை மழை பெய்யவில்லை. இதனால் குடிநீர் ஆதாரமாக உள்ள கொட்டக்குடி ஆற்றில் தண்ணீர் வருவதில்லை. குடிநீர் தொட்டிகளில் குடிநீர் நிரப்ப 2 முதல் 3 நாட்கள் ஆகிறது. எனவே குடிநீரை சிக்கனமாக போடி நகர மக்கள் பயன்படுத்த வேண்டும்.

மேலும் வீட்டில் உள்ள திறந்த குழாய்களை அடைக்க டேப் மாட்டி உபயோகப்படுத்த வேண்டும். குடிநீர் குழாய்களில் மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சி எடுக்க வேண்டாம். குடிநீர் டேங்குகளில் பள்ளமான இடங்களில் இருந்து தண்ணீர் வருவதால் குடிநீரை காய்ச்சி ஆறிய பின் குடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.#tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com