இமாச்சலில் கைகள் கட்டப்பட்ட நிலையில் 2 பெண் சடலங்கள் மீட்பு

இரண்டு கைகளும் ஒருவருக்கொருவராக கட்டப்பட்ட நிலையில் அழுகி கிடந்த 2 பெண் சடலங்கள் இமாச்சல பிரதேசத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GirlsfoundDead #Himachalpradesh
இமாச்சலில் கைகள் கட்டப்பட்ட நிலையில் 2 பெண் சடலங்கள் மீட்பு
Published on

சிம்லா:

இமாச்சல பிரதேச மாநிலம் கங்ரா மாவட்டம் பதேபூரில் அழுகிய நிலையில் 2 பெண் சடலங்கள் இருப்பதை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு 2 பெண்களின் கைகள் ஒருவருக்கொருவர் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய காவல் அதிகாரி சந்தோஷ், பெண்களின் சடலங்கள் அழுகிய நிலையில் இருப்பதால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை எனவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இறந்த பெண்கள் 25 முதல் 30 வயது வரை இருக்கலாம் என முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. #GirlsfoundDead #Himachalpradesh

X

Maalai Malar
www.maalaimalar.com