பாம்பன் தூக்குப்பாலத்தை கடக்க காத்திருக்கும் படகுகள்

மும்பையில் இருந்து ஆந்திரமாநிலம் காக்கிநாடா செல்ல பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை கடக்க 4 இழுவைப்படகுகள் துறைமுக அதிகாரிகளிடம் அனுமதிகேட்டு நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பாம்பன் தூக்குப்பாலத்தை கடக்க காத்திருக்கும் இழுவைப்படகுகள்
பாம்பன் தூக்குப்பாலத்தை கடக்க காத்திருக்கும் இழுவைப்படகுகள்
Published on

ராமேசுவரம்:

மும்பையில் இருந்து ஆந்திரமாநிலம் காக்கிநாடா செல்ல பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை கடக்க வந்துள்ள 4 இழுவைப்படகுகள் துறைமுக அதிகாரிகளிடம் அனுமதிகேட்டு பாம்பன் சிங்கிலிதீவு அருகே உள்ள தென்கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் வடக்கு கடல் பகுதியில் இருந்து தென் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல ஏராளமான மீன் பிடி விசைப்படகுகளும் தூக்குப்பாலம் திறப்புக்காக காத்திருக்கின்றன. துறைமுக அதிகாரிகள் ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு தூக்குப்பாலம் திறப்பது குறித்து தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் ரெயில்வே தூக்குப்பாலத்தின் உறுதி தன்மையை கண்டறிய ஐ.ஐ.டி. வல்லுனர்கள் குழுவினர் சென்சார் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி முடிந்த பின்னரே தூக்குப்பாலம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல்கள் மற்றும் மீன் பிடி படகுகள் விரைந்து கடந்து செல்ல வசதியாக மாதம் 2 முறையாவது தூக்குப்பாலத்தை திறந்துமூட ரெயில்வே துறைஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com