எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணின் குழந்தைக்கு ரத்த பரிசோதனை

எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இன்று ரத்த பரிசோதனை நடந்தது. #HIVBlood #PregnantWoman
எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணின் குழந்தைக்கு ரத்த பரிசோதனை
Published on

மதுரை:

விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டது. இந்த விவகாரம் தமிழகம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு கடந்த மாதம் 17-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு 45 நாட்கள் கழித்து தான் எச்.ஐ.வி. பரிசோதனை செய்ய வேண்டும்.

அதன் அடிப்படையில் குழந்தைக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்று உள்ளதா? என்பதை கண்டறியும் வகையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பி.சி.ஆர். எனப்படும் ரத்த பரிசோதனை இன்று நடந்தது.

குழந்தையின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு செங்கல்பட்டில் உள்ள ஐ.சி.எம்.ஆர். ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இது குறித்து டீன் வனிதா கூறியதாவது:-

குழந்தையின் ரத்தம் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்க உள்ளோம். பரிசோதனையின் முடிவு தெரிய 30 நாட்கள் ஆகும். அதன் பிறகு 6 மாதம், 18 மாதம் என்ற அடிப்படையில் குழந்தைக்கு மறு பரிசோதனை செய்யப்படும்.

இந்த 3 பரிசோதனைகளின் முடிவில் தான் குழந்தைக்கு எய்ட்ஸ் தொற்று இருக்கிறதா? என்பது தெரியவரும்.

முதற்கட்ட பரிசோதனையில் குழந்தைக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பது தெரியவந்தால் உயர்தர சிகிச்சை அளிக்கப்படும்.

குழந்தையின் தாய் 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது எய்ட்ஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு உள்ளன. அதனால் குழந்தைக்கு எய்ட்ஸ் தொற்று இருக்காது என்று நம்புகிறேன்.

தற்போது குழந்தையின் எடை அதிகரித்துள்ளது. தாயும், சேயும் ஆரோக்கியமாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com