அண்ணாசாலையில் மாணவியை ஆசீர்வதிப்பது போல நடித்து ரூ.5 ஆயிரம் பறிப்பு

அண்ணாசாலையில் நடந்து சென்ற மாணவியை ஆசீர்வதிப்பது போல நடித்து ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற திருநங்கைகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
பணம் பறிப்பு
பணம் பறிப்பு
Published on

சென்னை:

ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் தனியார் விடுதியில் தங்கி சி.ஏ. படித்து வருபவர் இலக்கியா(20). இவர் அப்பகுதியில் நடந்து சென்றபோது திருநங்கைகள் 5 பேர் ஆசீர்வாதம் செய்வது போல நடித்தனர். திடீரென இலக்கியாவின் கைபையை பிடுங்கிய திருநங்கைகள் அதில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை எடுத்தனர்.

பின்னர் பையை வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுபற்றி அண்ணாசாலை போலீசில் இலக்கியா புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரூ.5 ஆயிரத்துடன் தப்பிய திருநங்கைகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சென்னையில் சமீபகாலமாக திருநங்கைகள் ஆசிர் வாதம் செய்வது போல நடித்து பணம் பறிப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com