நைஜீரியா மசூதி மீது போக்கோஹரம் பயங்கரவாதிகள் தாக்குதல் - 20 பேர் பலி

நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள மசூதி அருகே இன்று போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைஜீரியா மசூதி மீது போக்கோஹரம் பயங்கரவாதிகள் தாக்குதல் - 20 பேர் பலி
Published on

நைஜர்:

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர்.

இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் போர்னோ மாவட்ட தலைநகரான மைடுகுரி நகரை ஒட்டியுள்ள ஆடமாவா மாநிலத்திற்கு உட்பட்ட முபி நகரில் உள்ள மசூதி அருகே இன்று போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com