நாலந்தா பட்டாசு ஆலை தீ விபத்து - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

பீகார் மாநிலம் நாலந்தா அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாலந்தா பட்டாசு ஆலை தீ விபத்து - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
Published on

பாட்னா:

பீகார் மாநிலம் நாலந்தா அருகே உள்ள ஜலால்புர் என்ற பகுதியில் அரசின் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. வெடிமருந்து கிடங்கு மற்றும் பட்டாசு கிடங்கில் பயங்கரமாக தீ பற்றி எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகியிருந்த நிலையில், மருத்துவமனைக்கு படுகாயங்களுடன் கொண்டு செல்லப்பட்ட 25-க்கும் மேற்பட்டவர்களில் 4 பேர் தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com