

புதுடெல்லி:
திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 44 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 60 உறுப்பினர்களை கொண்ட இந்த சட்டப் பேரவை காலம் அடுத்த மாதம் முடிகிறது. இதையடுத்து திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த 18-ம் தேதி அறிவித்தது.
வேட்பு மனுதாக்கல்: ஜனவரி 31
வேட்பு மனு பரிசீலனை: பிப்ரவரி 1
மனுக்கள் வாபஸ்: பிப்ரவரி 3
தேர்தல் நாள்: பிப்ரவரி 18.
வாக்கு எண்ணிக்கை: மார்ச் 3
இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அங்கு 51 தொகுதிகளில் தனியாக போட்டியிடுகிறது.
இந்நிலையில், திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, பா.ஜ.க. மூத்த தலைவர் ஜே.பி.நட்டா 4 பெண்கள் உள்பட 44 பேர் கொண்ட முதல் கட்ட பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். பா.ஜ.க. மாநில பொது செயலாளர் பிரதிமா பவுமிக் தான்பூர் தொகுதியிலும், மாநில தலைவர் பிப்லாப் குமார்தேவ் பனாமாலிபூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். #TripuraPolls #BJP #tamilnews