கேரளாவில் தொண்டர்கள் படுகொலை: டெல்லி மா.கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகம் முன் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

கேரளாவில் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தொண்டர்கள் கொல்லப்படுவதை கண்டித்து டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தின்முன் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவில் தொண்டர்கள் படுகொலை: டெல்லி மா.கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகம் முன் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
Published on

புதுடெல்லி:

கேரளாவில் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தொண்டர்கள் கொல்லப்படுவதை கண்டித்து மக்கள் யாத்திரை என்ற பெயரில் 15 நாட்கள் பிரசார யாத்திரையை நடத்த பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்தது. இந்த யாத்திரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், முதல்-மந்திரியுமான பினராயி விஜயனின் சொந்த ஊரான பையனூரில் நேற்று தொடங்கியது.

இந்த யாத்திரையை நேற்று தொடங்கிவைத்து பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் நடத்திவரும் வன்முறைகளை கண்டித்து நாளை (4-ம் தேதி) முதல் 15-ம் தேதிவரை குஜராத்தில் இருந்து அசாம் வரை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நாட்டில் உள்ள அனைத்து மாநில தலைநகரங்களிலும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை நோக்கி பா.ஜ.க.வினர் பாத யாத்திரை செல்வார்கள்.

டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்துக்கு பேரணியாக செல்லும் பா.ஜ.க. தொண்டர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபடுவார்கள் என அறிவித்திருந்தார்.

அதன்படி, டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தின்முன் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மந்திரி ஜித்தேந்திரா சிங், டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி, ஷாநவாஸ் ஹுசேன், ஷியாம் ஜாஜு மற்றும் மூத்த தலைவர்களுடன் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com