

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம் தண்டிக்கப்பட்டது இந்திய கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என பா.ஜ.க எம்.பி சாக்ஷி மஹாராஜ் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.
அரியானா மாநிலத்தில் சாமியாராக உள்ள குர்மீத் ராம் தன் ஆசிரமத்தில் உள்ள இரண்டு சிறுமிகளை கற்பழித்ததாக நடைபெற்று வந்த விசாரணையில் இன்று அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து அரியானா, பஞ்சாப்பில் வன்முறை வெடித்துள்ளது. அரியானா - பஞ்சாப் மாநிலங்களில் சாமியாரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கலவரத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 250 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கலவரக்காரர்கள் டெல்லியை நோக்கி முன்னேறி வரும் நிலையில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாமியார் குர்மீத் ராம் உன்னதமான மனிதர் என பா.ஜ.க எம்.பி சாக்ஷி மஹாராஜ் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.
செய்தியாளர்களுக்கு சாக்ஷி மஹாராஜ் அளித்த பேட்டியில், “ ஒரு நபர் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதற்காக தண்டிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு ஆதரவாக கோடி பேர் உள்ளனர். யார் சரி? ஒரு கோடி பேர் குர்மீத் ராம் உடன் உள்ளனரா இல்லை அந்த பெண்களுடன் உள்ளனரா?.