கைகளால் கழிவறையை சுத்தம் செய்த பா.ஜ.க. எம்.பி

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. எம்பி ஜனார்தன் மிஷ்ரா பள்ளி கழிவறையை தனது கைகளால் சுத்தம் செய்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. #BJPMP #JanardanMishra
கைகளால் கழிவறையை சுத்தம் செய்த பா.ஜ.க. எம்.பி
Published on

போபால்:

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. எம்பி ஜனார்தன் மிஷ்ரா பள்ளி கழிவறையை தனது கைகளால் சுத்தம் செய்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. ஜனார்தன் மிஷ்ரா. இவர் அடிக்கடி மக்களுக்காக நேரடியாக களத்தில் இறங்குவது வழக்கமாகும். இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா பகுதியில் காஜூஜா என்ற கிராமத்தில் தூய்மை பணிகளை அவர் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்குச் சென்றார்.

அங்கு அசுத்தமாக இருந்ததால் பயன்படுத்தப்படாமல் இருந்த கழிவறையை தனது கைகளால் ஜனார்தன் மிஷ்ரா சுத்தம் செய்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #BJPMP #JanardanMishra #cleanstoiletwithhands #tamilnews

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com