ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனம் ரூ.1000 கோடி மோசடி - பாரதிய ஜனதா எம்.பி. குற்றச்சாட்டு

மத்திய அரசின் திட்டங்களை ஏமாற்றி ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனம் ரூ.1000 கோடி வரை மோசடி செய்திருப்பதாக ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா எம்.பி. உதித்ராஜ் குற்றம் சாட்டி இருக்கிறார். #ICICIBankScam
ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனம் ரூ.1000 கோடி மோசடி - பாரதிய ஜனதா எம்.பி. குற்றச்சாட்டு
Published on

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் துணை நிறுவனமாக ஐ.சி.ஐ.சி.ஐ. லேம்பார்டு என்ற இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மத்திய அரசின் திட்டங்களை ஏமாற்றி ரூ.1000 கோடி வரை மோசடி செய்திருப்பதாக ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா எம்.பி. உதித்ராஜ் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய ஜவுளி துறை சார்பில் நெசவு தொழிலாளர்களுக்கு ராஜீவ் காந்தி சில்பி சுவஸ்தயா பீமா யோஜனா என்ற இன்சூரன்ஸ் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் ஐ.சி.ஐ.சி.ஐ. லேம்பார்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இதில் 30 ஆயிரம் நெசவுத் தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் 2009-ம் ஆண்டு 1145 பேர் போலியாக சேர்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலி ஆட்களை இன்சூரன்ஸ் நிறுவனமே சேர்த்து இருந்தது.

இதேபோல மேற்கு வங்காளம், அசாம், உத்தர பிரதேசம், மணிப்பூர் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் இவ்வாறு மோசடி ஆட்களை அந்த நிறுவனமே சேர்த்து மத்திய அரசின் திட்ட பணத்தை மோசடி செய்துள்ளது. இவ்வாறு ரூ.1000 கோடி வரை மோசடி நடந்திருக்கிறது.


ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி தலைவர் சந்தாகோச்சார்

இதற்கு பின்னர் ஆர்.கே. நாயரை ஐ.சி.ஐ.சி.ஐ. புரடன்சியல் நிறுவனத்தில் போர்டு உறுப்பினராக சேர்த்துக் கொண்டனர். தற்போது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் போர்டு உறுப்பினராக அவர் இருக்கிறார்.

ராஜஸ்தானில் சி.பி.ஐ. அதிகாரியாக இருந்த அணிஸ்பிரசாத் இந்த மோசடியை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக ஆரம்பகட்ட விசாரணை தொடங்கினார். ஆனால் அங்கிருந்து அவர் உடனடியாக மாற்றப்பட்டார். அந்த மோசடி விவகாரமும் ஒன்றும் இல்லாமல் செய்யப்பட்டது.

இந்த மோசடியில் முன்னாள் மத்திய மந்திரி சந்தோஷ் காங்வாருக்கும் தொடர்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக சமீபத்தில் புகார் வந்தது. ஆனால் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைவர் சந்தாகோச்சாரின் மைத்துனர் ராஜாகோச்சார், சகோதரர் தீபக் கோச்சார் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பதாக கருதி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com