கத்துவா பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்ட இரு மந்திரிகள் ராஜினாமா

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட பாஜகவை சேர்ந்த இரு மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர். #Kathuarapecase #BJPMinistersResign #ChaudharyLalSingh #ChanderPrakash
கத்துவா பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்ட இரு மந்திரிகள் ராஜினாமா
Published on

புதுடெல்லி:

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட பாஜகவை சேர்ந்த இரு மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் இரு பாஜக மந்திரிகள் கலந்துகொண்டனர். 

இந்நிலையில், அந்த பேரணியில் கலந்துகொண்ட மந்திரிகளான சந்திரபிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதத்தை ஜம்மு - காஷ்மீர் மாநில பா.ஜ.க. தலைவர் சத் சர்மாவிடம் அவர்கள் அளித்தனர். அவர்களது இந்த முடிவு குறித்து நாளை நடைபெறும் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சத் சர்மா தெரிவித்துள்ளார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட இரு பாஜக மந்திரிகள் ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kathuarapecase #BJPMinistersResign #ChaudharyLalSingh #ChanderPrakash

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com