

மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தா நகரில் நடைபெற்றுவரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல மாநிலங்களில் உள்ள 22 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தை கேலி செய்து கருத்து வெளியிட்டுள்ள மேற்கு வங்காளம் மாநில பா.ஜ.க. தலைவர் முகுல் ராய், ‘ஜோதிபாசு ஆட்சிக்காலத்தில் நடந்ததைப்போல் மம்தா ஆட்சியிலும் மேற்கு வங்காளம் மாநிலம் மீண்டும் ஒரு சர்க்கஸ் காட்சியை பார்க்க நேரிட்டுள்ளது.
மறுபடியும் இந்தியாவை அழிக்க பல்வேறு கோமாளிகளும், பொய் பேசுவதில் வல்லவர்களான கலைஞர்களும் ஒன்றுசேர்ந்துள்ளனர்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் ராகுல் சின்ஹா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஊழல்கறை படிந்த தலைவர்கள் அனைவரும் மோடிக்கு எதிராக போரிட ஒன்று திரண்டுள்ளனர். இந்த ஊழல்வாதி கும்பலை எதிர்த்தும் தேசவிரோதிகளுக்கு எதிராகவும் நடைபெறும் போரில் மோடியின் பின்னால் இந்த நாட்டு மக்கள் உறுதியாக துணைநிற்பார்கள்’ என தெரிவித்துள்ளார்.