அய்யாக்கண்ணுவை தாக்கிய பா.ஜ.க. பெண் நிர்வாகிக்கு ‘வீர தமிழச்சி’ விருது எச்.ராஜா, டுவிட்டரில் வழங்கினார்

திருச்செந்தூரில் அனுமதியின்றி துண்டு பிரசுரங்களை வினியோகித்த அய்யாக்கண்ணுவை தாக்கிய பா.ஜ.க. பெண் நிர்வாகிக்கு எச்.ராஜா, டுவிட்டரில் ‘வீர தமிழச்சி’ விருது வழங்கியுள்ளார். #HRaja
அய்யாக்கண்ணுவை தாக்கிய பா.ஜ.க. பெண் நிர்வாகிக்கு ‘வீர தமிழச்சி’ விருது எச்.ராஜா, டுவிட்டரில் வழங்கினார்
Published on

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கன்னியாகுமரியில் இருந்து சென்னை கோட்டை நோக்கி விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

இதற்கிடையே, அவர்கள் நேற்று முன்தினம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு வந்த பக்தர்களிடம் துண்டுப் பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

அந்த சமயத்தில் அங்கு வந்த தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. மகளிர் அணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள் துண்டு பிரசுரம் விநியோகம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் அய்யாக்கண்ணுவை நெல்லையம்மாள் தாக்கியதாக தெரிகிறது.

இந்நிலையில், திருச்செந்தூரில் அனுமதியின்றி துண்டு பிரசுரங்களை வினியோகித்த அய்யாக்கண்ணுவை தாக்கிய பா.ஜ.க. பெண் நிர்வாகி நெல்லையம்மாளுக்கு எச்.ராஜா, டுவிட்டரில் ‘வீர தமிழச்சி’ விருது வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக எச்.ராஜா தனது டுவிட்டரில் கூறுகையில், “பொய்யும், புனைச்சுருட்டும் தன் ஆயுதமாகக் கொண்டு, மலிவு விளம்பரம் தேடும் அய்யாக்கண்ணு திருச்செந்தூரில் இழிந்த வார்த்தைகளை உபயோகித்து, நெல்லையம்மாளை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அவருக்கு தக்க பதிலடி கொடுத்த நெல்லையம்மாளுக்கு வீர தமிழச்சி விருது வழங்குவோம்” என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com