பீகார் ராஜ்யசபா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் சதீஷ் சந்திர துபே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாஜக
பாஜக
Published on

பாட்னா:

பீகார் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானவர் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராம்ஜெத் மலானி. இவர் கடந்த மாதம் 8-ம் தேதி காலமானார்.

இதையடுத்து, பீகாரில் காலியாக உள்ள ராஜ்யசபா இடத்துக்கு அக்டோபர் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தள்ளது. இதில் பாஜக சார்பில் சதீஷ் சந்துரு துபே போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் சதீஷ் சந்துரு துபே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் இருந்து இன்று பெற்றுக் கொண்டார்.

ஏற்கனவே, உத்தர பிரதேசம் மாநிலத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் சுதான்ஷு திரிவேதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com