உத்தரப்பிரதேசம் கைரானா மற்றும் நூர்பூர் தொகுதிகளின் இடைத்தேர்தல் - பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கைரானா பாரளுமன்றம் மற்றும் நூர்பூர் சட்டமன்றம் தொகுதிகளின் இடைத்தேர்தல் வேட்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. #BJPcandidates #bypolls
உத்தரப்பிரதேசம் கைரானா மற்றும் நூர்பூர் தொகுதிகளின் இடைத்தேர்தல் - பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு
Published on

லக்னோ :

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கைரானா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹுக்கும் சிங் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். மேலும் நூர்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான லோகேந்திர சிங் சாலை விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து இந்த 2 தொகுதிகளிலும் மே மாதம் 28-ம் தேதி  இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஷாம்லி மாவட்டதில் உள்ள கைரானா  பாராளுமன்றம் தொகுதிக்கு மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹுக்கும் சிங் மகள் ம்ரிங்கா சிங் மற்றும் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள  நூர்பூர் சட்டமன்றம் தொகுதிக்கு மறைந்த அதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை இருந்து சாலை விபத்தில் மறைந்த லோகேந்திர சிங்கின் மனைவி அவானி சிங் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். #BJPcandidates  #bypolls

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com