

மத்திய மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார் துபே. இவர் வீட்டின் அருகில் உள்ள ஒரு டெய்லரிடம் 2 மீட்டர் துணி கொடுத்து ஒரு டவுசர் தைத்து தருமாறு கேட்டுள்ளார். டெய்லர் அதற்கு 70 ரூபாய் ஆகும் என்று கூறியுள்ளார். சரி என்று துபே கூறியுள்ளார். இரண்டு நாட்கள் கழித்து டவுசரை வாங்க சென்றவர் துகேக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏன் என்றால் அவர் கொடுத்த அளவை விட குட்டையாக அந்த டைலர் டவுசரை தைத்து கொடுத்துள்ளார்.
நான் சொன்ன அளவுக்கு டவுசர் தைத்துக் கொடுக்க வேண்டுமெனவும், அதனால் புதிதாக வேறு துணியில் தைத்த தருமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார் துபே. ஆனால் டெய்லர் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த கிருஷ்ணகுமார் துபே போலீஸ் நிலையத்திற்கு சென்றார் .
அங்கு டெய்லர் தனக்கு குட்டையான டவுசரை தைத்து கொடுத்து விட்டதாக புகார் அளித்தார்.. புகாரை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த புகாரை எப்படி விசாரிப்பது என யோசித்த போலீசார் மனுவை பெற்றுக்கொண்டு பின்னர் நீங்கள் இதற்கு நிவாரணம் வேண்டுமென்றால் நீதிமன்றத்தை அணுகுமாறு ஆலோசனை வழங்கி திருப்பி அனுப்பினர்.