பிட் காயின் போன்ற ‘மெய்நிகர் நாணயம் ஒழிப்போம்’ - அருண் ஜெட்லி அறிவிப்பு

பிட் காயின் போன்ற ‘மெய்நிகர் நாணயம் ஒழிப்போம்’ என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையில் நேற்று குறிப்பிட்டார். #Budget2018 #UnionBudget2018
பிட் காயின் போன்ற ‘மெய்நிகர் நாணயம் ஒழிப்போம்’ - அருண் ஜெட்லி அறிவிப்பு
Published on

நமது நாட்டில் கிரிப்டோ கரன்சி (மெய் நிகர் நாணயம்) என்று அழைக்கப்படுகிற பிட் காயின், ரிப்பிள், எத்திரியம் போன்றவை புழக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இவற்றுக்கு சட்டபூர்வ அனுமதி கிடையாது.

இந்த நிலையில் இத்தகைய மெய் நிகர் நாணயம் தொடர்பாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையில் நேற்று குறிப்பிட்டார்.

அப்போது அவர், “மெய்நிகர் நாணயத்தை அரசு சட்டப்படியான கரன்சியாக கருதவில்லை. எனவே அதை உபயோகத்தில் இருந்து ஒழித்துக்கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்” என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com