பிறந்தநாள் கொண்டாட காரில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

தவளக்குப்பத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிறந்தநாள் கொண்டாட காரில் மதுபாட்டில் கடத்திய நபரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

பாகூர்:

தவளக்குப்பம் போலீசார் நேற்று மாலை தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த காரில் 4 முழு பிராந்தி பாட்டில் மற்றும் பீர் பாட்டில்கள், குவாட்டர் பிராந்தி பாட்டில் இருந்தன.

இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தவளக்குப்பம் சதா நகரை சேர்ந்த பகலவன் (வயது45) என்பதும், இவர் தனது பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுக்கு விருந்து வைப்பதற்காக மது பாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பகலவனை போலீசார் கைது செய்தனர். மேலும் மது பாட்டில்கள் மற்றும் மது பாட்டில்கள் கடத்த பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com