அரசு பள்ளிகளில், ஆசிரியர்- மாணவர்கள் வருகை பதிவுக்கான பயோ மெட்ரிக் திட்ட விளக்க கூட்டம்

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர்கள் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் முறை திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில், ஆசிரியர்- மாணவர்கள் வருகை பதிவுக்கான பயோ மெட்ரிக் திட்ட விளக்க கூட்டம்
Published on

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர்கள் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் முறை திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் பயோ மெட்ரிக் திட்டம் குறித்த விளக்க கூட்டம் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதனை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரராஜூ தொடங்கி வைத்தார்.

பயோ மெட்ரிக் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பயோ மெட்ரிக் கருவி குறித்தும், பயோ மெட்ரிக் திட்டத்தை பள்ளிகளில் செயல்படுத்துவதற்காக ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்கான விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும் விளக்கி பேசினார். இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் என பலர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com