போடி அருகே மரத்தில் பைக் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி

போடி அருகே மரத்தில் பைக் மோதி என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போடி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடி அருகே மரத்தில் பைக் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி
Published on

போடி:

தேனி பங்களாமேடுபகுதியை சேர்ந்தவர் குணசீலன். இவரது மகன் கீர்த்திவாசன் (வயது19). என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான இவர் தனது நண்பர் ஸ்ரீபன் என்பவருடன் தீபாவளி விடுமுறையொட்டி போடியில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க பைக்கில் சென்றார்.

மோட்டார் சைக்கிளை ஸ்ரீபன் ஓட்டினார். போடியை அடுத்த மீனாவிலக்கு பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே இருந்த சென்டர் மீடியன் அருகிலிருந்த புளிய மரத்தில் பயங்கரமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட கீர்த்திவாசன் சம்பவ இடத்திலேயே பலியானார். ஸ்ரீபன் பலத்த காயங்களுடன் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போடி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com