புளியங்குடி அருகே பைக் மோதி முதியவர் படுகாயம்

புளியங்குடி அருகே பைக் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்து
விபத்து
Published on

புளியங்குடி:

புளியங்குடி சிந்தாமணி சான்றோர் மடத்து தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 70). இவர் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சிந்தாமணி பகுதியிலுள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு ரோட்டை கடந்த போது, புளியங்குடியில் இருந்து பைக்கில் சென்றுகொண்டிருந்த வாசுதேவநல்லூர் ரத்தினசாமி நாடார் தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் மாரிச்சாமி (37) என்பவர் அதிவேகமாக வந்து துரைராஜ் மீது எதிர்பாராதவிமாக மோதி விட்டார்.

 இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து துரைராஜ் மகன் வைத்தியலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com