ஆத்தூர் அருகே பைக் மோதியதில் முதியவர் படுகாயம்

ஆத்தூர் அருகே நடந்து சென்றுக் கொண்டிருந்த முதியவர் மீது பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார். பைக்கை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆத்தூர் அருகே பைக் மோதியதில் முதியவர் படுகாயம்
Published on

ஆறுமுகநேரி:

ஆத்தூர் அருகே உள்ள முக்காணி வல்லர் தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது65). விவசாயி. இவர் நேற்று முக்காணி மெயின் பஜாரில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த கோபால் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது பற்றி ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விபத்திற்கு காரணமான பைக்கை ஓட்டி வந்த தூத்துக்குடி சுரேஷ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

X

Maalai Malar
www.maalaimalar.com