மெஞ்ஞானபுரம் அருகே பைக் விபத்தில் முதியவர் படுகாயம்- வாலிபர் கைது

மெஞ்ஞானபுரம் அருகே பைக்கும் மோட்டார் சைக்கிளிலும் மோதி கொண்ட விபத்தில் முதியவர் கால் முறிந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
மெஞ்ஞானபுரம் அருகே பைக் விபத்தில் முதியவர் படுகாயம்- வாலிபர் கைது
Published on

திருச்செந்தூர்:

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கல்விளை கீழத் தெருவைச் சேர்ந்தவர் சிலுவைமுத்து (வயது 68) விவசாயியான இவர் மெஞ்ஞானபுரத்திலிருந்து கல்விளையை நோக்கி தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.  அப்போது அந்த வழியே அணைத்தலையை சேர்ந்த தினேஷ் (24) மோட்டார் பைக்கில் வேகமாக வந்தார்.  

பூலிகுடியிருப்பு விலக்கில் வரும்போது எதிர்பாராத விதமாக இருவரும் மோதிக் கொண்டனர். சம்பவ இடத்தில் சிலுவைமுத்து கால் முறிந்து படுகாயமடைந்தார். படுகாயமடைந்த  அவரை நாகர்கோவில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு  சேர்த்தனர். 

இது குறித்து சிலுவைமுத்து புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் சப்- இன்ஸ் பெக்டர் உத்திரகுமார் வழக்குபதிவு செய்து தினேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com