கிருஷ்ணகிரியில் பைக் மீது ஆட்டோ மோதி பைனான்ஸ் ஊழியர் பலி

கிருஷ்ணகிரியில் பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் பைனான்ஸ் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

கிருஷ்ணகிரி:

கரூர் மாவட்டம் தீரன் சின்னமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் குணா (வயது28). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் தனது பைக்கில் கிருஷ்ணகிரி - ஓசூர் செல்லும் ரோட்டில் உள்ள ராயக்கோட்டை ரோடு சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த ஆட்டோ இவர் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குணா கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் சிகிச்சை பலனின்றி குணா பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com