ஒடிசாவின் பொறுப்பு ஆளுநராக பீகார் கவர்னர் சத்யா பால் மாலிக் நியமனம்

ஒடிசா ஆளுநரின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அப்பொறுப்பை பீகார் கவர்னர் சத்யா பால் மாலிக் கூடுதலாக கவனிப்பார் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். #SatyaPalMalik #odishagovernor #Bihar
ஒடிசாவின் பொறுப்பு ஆளுநராக பீகார் கவர்னர் சத்யா பால் மாலிக் நியமனம்
Published on

புதுடெல்லி:

ஒடிசாவின் ஆளுநராக எஸ்.சி. ஜமீர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். அவரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், ஒடிசாவின் தற்காலிக ஆளுநராக சத்யா பால் மாலிக்கை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 'பீகார் மாநில ஆளுநர் சத்யா பால் மாலிக் கூடுதல் பொறுப்பாக ஒடிசா கவர்னர் பதவியையும் வகிப்பார் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஒடிசா ஆளுநர் எஸ்.சி. ஜமீரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால் அடுத்த ஆளுநர் தேர்ந்தெடுக்கப்படும் வரை சத்யா தற்காலிகமாக கவர்னர் பதவியில் இருப்பார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. #SatyaPalMalik #odishagovernor #Bihar #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com