ராம் விலாஸ் பஸ்வான் முதலாமாண்டு நினைவு தினம்- கவர்னர், தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் மத்திய மந்திரியான ராம் விலாஸ் பாஸ்வானின் நினைவு தினத்தையொட்டி, பிரதமர் மோடி எழுதிய கடிதத்தை பஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பஸ்வான்  திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திய ஆளுநர்
பஸ்வான் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திய ஆளுநர்
Published on

பாட்னா:

லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  அவரது திருவுருவப்படத்திற்கு பீகார் கவர்னர் பாகு சவுகான், மத்திய மந்திரியும், பஸ்வானின் சகோதரருமான பசுபதி குமார் பராஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார். 

முன்னாள் மத்திய மந்திரியான ராம் விலாஸ் பாஸ்வானின் நினைவு தினத்தையொட்டி, பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதத்தை பஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மறைந்த தலைவர்  மீதான பாசத்திற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com