மூளைக்காய்ச்சலுக்கு 73 பேர் பலி - பீகார் மருத்துவமனையில் மத்திய இணை மந்திரி நேரில் ஆய்வு

பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் இன்று முசாபர்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார்.
மூளைக்காய்ச்சலுக்கு 73 பேர் பலி - பீகார் மருத்துவமனையில் மத்திய இணை மந்திரி நேரில் ஆய்வு
Published on

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது.

இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வரை 43 குழந்தைகள் பலியாகி இருந்தனர். நோய் பாதிப்பால் 117 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவியுள்ளது. இன்று பிற்பகல் நிலவரப்படி இந்நோய்களினால் பலியானோர் எண்ணிக்கை 73-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள முசாபர்பூர் அரசு மருத்துவமனைக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் இன்று வந்தார். நோயாளிகளுக்கு அளிக்கப்படும்  பாதுகாப்பு மற்றும் சிகிச்சை முறைகளை பற்றி மருத்துவர்களுடன் ஆய்வு செய்தார். மேலும் அங்கு தங்கியுள்ள நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com