பீகார் சட்டசபை தேர்தல் - இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு

பீகாரில் நவம்பர் 3 அன்று நடைபெற உள்ள அடுத்தக் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் இன்றோடு நிறைவடைந்துள்ளது.
தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி
தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி
Published on

பாட்னா:

பீகாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

முதல் கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நவம்பர் 3 அன்று நடைபெற உள்ள அடுத்தக் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் இன்றோடு நிறைவடைகிறது. இதையொட்டி பீகாரில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பீகாரில் ஆளும் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய மோடி, உ.பி.யில் இரண்டு இளவரசர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் பீகாரிலும் ஏற்படும் என்றார்.

இதேபோல், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com