அமிதாப் பச்சனை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 22 மில்லியனாக உயர்ந்தது

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சமூக வலைத்தளமான டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 29 மில்லியனாக (இரண்டு கோடியே தொன்னூறு லட்சமாக) இன்று உயர்ந்தது.
அமிதாப் பச்சனை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 22 மில்லியனாக உயர்ந்தது
Published on

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சமூக வலைத்தளமான டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 29 மில்லியனாக (இரண்டு கோடியே தொன்னூறு லட்சமாக) இன்று உயர்ந்தது.

நடிகர் அமிதாப் பச்சன்(74) கடந்த 2010-ம் ஆண்டு சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தார். திரையுலகம் தொடர்பாகவும், நாட்டின் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் அவ்வப்போது தனது கருத்துகளை அவர் பதிவிட்டு வருகிறார். அவரை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை இன்று 29 மில்லியனாக (இரண்டு கோடியே தொன்னூறு லட்சமாக) உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக, இன்று பூரிப்புடன் கருத்து தெரிவித்துள்ள அமிதாப் பச்சன், தன்னை பின்தொடரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அமிதாப்புக்கு அடுத்தபடியாக, டுவிட்டரில் ஷாருக்கானை 27.6 மில்லியன் பேரும், சல்மான் கானை 25.1 மில்லியன் பேரும், அமீர் கானை 21.8 மில்லியன் பேரும், நடிகைகளில் தீபிகா படுகோனேவை 20 மில்லியன் பேரும், பிரியங்கா சோப்ராவை 18.9 மில்லியன் பேர்ரும் பின்தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com