புனிதமற்ற நேரத்தில் பூமி பூஜையா? - திக்விஜய் சிங் கவலை

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை புனிதமற்ற நேரத்தில் நடந்துள்ளதாக கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கவலை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்
Published on

புதுடெல்லி:

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நேற்று நடந்த பூமி பூஜை புனிதமற்ற நேரத்தில் நடந்துள்ளதாக கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கவலை தெரிவித்துள்ளார்.

இதையொட்டி நேற்று அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “பூமி பூஜை நடந்துள்ள நேரமானது, ஜோதிடம் மற்றும் வேதங்களின் நிறுவப்பட்ட நம்பிக்கைகளுக்கு முரணானது. கடவுளே, எங்களை மன்னியும். ராமர் கோவில் கட்டுமானம் சுமுகமாக நடந்தேற நான் பிரார்த்திக்கிறேன்” என கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com