சிறுமுகை அருகே பவானி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

சிறுமுகை அருகே பவானி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமுகை அருகே பவானி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
Published on

மேட்டுப்பாளையம்:

சிறுமுகை அருகே கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்(39) விவசாயி. இவர் தனது தோட்டத்திற்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தார்.

இதற்காக ஆற்றில் மோட்டார் பம்ப் வைத்து குழாய் அமைத்திருந்தார். இந்த நிலையில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக மோட்டார் மற்றும் குழாய்கள் தண்ணீரில் மூழ்கியது.

தண்ணீரில் மூழ்கிய மோட்டார் மற்றும் குழாய்களை எடுக்க மூடுதுறையைச் சேர்ந்த நாகராஜ்(45), பெரிய குமாரபாளையத்தைச் சேர்ந்த செல்வம்(38), கணேச புரத்தைச் சேர்ந்த முருகசாமி ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். மதியம் 1 மணியளவில் நாகராஜ், சந்தோஷ் ஆகிய 2 பேரும் ஆற்றில் இறங்கி குழாய்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென எதிர் பாராதவிதமாக நாகராஜின் கால்கள் ஆற்றுக்குள் இருந்த வாழை மர மட்டைகளில் சிக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com